சிவாஜி மீது பிரகாஷ்ராஜ் எனும் நடிகருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. பல முறை அவரை நையாண்டி செய்வதில் செல்லத்துக்கு ஒரு ஆத்ம திருப்தி. வெள்ளித்திரை படத்தில் செல்லமும் ப்ரித்விராஜூம் பேசும் ஒரு காட்சியில் "அம்மா செத்தால் வாயில் அடித்து கொண்டு அழுவோம் நாங்கள்(தமிழ் நடிகர்கள்..குறிப்பாக சிவாஜி). ஓவர் ஆக்டிங் செய்தாலும் நாங்கள் நடிகர்கள்தான்" என கிண்டல் செய்திருப்பார் செல்லம். இன்னும் பல உதாரங்கள் உண்டு. நடிக்க தெரியாதவன் ஓவர் ஆக்டிங் செய்வதற்கும், நடிப்பின் சிகரம் சற்று மிகையாக நடிப்பதற்கும் மிக பெரிய வித்யாசம் உள்ளது செல்லமே.
இறந்து போன ஒரு கலைஞனை கிண்டல் செய்வது எந்த நாகரீகத்தில் சேர்த்தி?. யதார்த்த நடிப்பு.. யதார்த்த நடிப்பு என்று எதை சொல்கிறாய் செல்லம். வசூல் ராஜா படத்தில் ஒரு காலேஜ் டீன் லூசு மாதிரி சிரிப்பதையா? அல்லது குங்கும போட்டும் பட்டு சட்டையும் போட்டு கொண்டு "அவன தூக்குடா ஏய்.." என கத்துவதையா? எங்கள் சிங்கம் சிவாஜி ஹரிச்சந்திரா, முதல் மரியாதை, தேவர் மகன் என பல கால கட்டங்களில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதை உலகறியும்.
எங்கள் சிங்கம் தொடாத பாத்திரங்கள் இல்லை. எட்டாத சிகரங்கள் இல்லை.

அழகு என்றாலும் .....

கம்பீரம் என்றாலும்.......
ஸ்டைல் என்றாலும்.....

பாசம் என்றாலும்...
ஒரே ஷாட்டில் உலகில் எவருமே பேசாத பல பக்க வசனம் என்றாலும்...
(படம்: ராஜா ராணி)
உலக சபையில் அங்கீகாரம் பெறுதல் என்றாலும்....
முழு நீள நகைச்சுவை என்றாலும்................
புரட்சிகர வசனங்கள் என்றாலும்....
ஆன்மிகம் என்றாலும்....
நட்பு என்றாலும்.........
உலக அளவில் அங்கீகரம் பெற முழு தகுதி வாய்ந்த சிங்கத்தமிழனை தேசிய அளவில் கூட தெரியவிடாமல் இருட்டடிப்பு செய்த மத்திய அரசே....தலை கவிழ்ந்து வெட்கப்படு..
எங்கள் பொக்கிஷத்தை மேலும் சீண்டுவதை விட்டு விடு செல்லமே... பிள்ளை பிராயத்தில் வறுமையில் சுழன்று, உணவுக்கு அலைந்து சிவாஜி பட்ட ரணங்கள் ஆயிரம். இன்று எங்கள் இதயங்களில் குடி கொண்டு இருக்கும் மகா கலைஞனின் ஆத்மாவை குதராதே.. அது அமைதியாக இளைப்பாரட்டும்....
எங்கள் சிங்கம்...அமைதியாக இளைப்பாரட்டும்...
வந்தாரை வாழ வைக்கும் பூமி இது செல்லம்...வாழ்க நீ பல்லாண்டு...
