ஒரு திரைப்படம் வருவதற்கு முன்பே அது பற்று பல நெகடிவ் விமர்சனங்கள்... எந்திரனை பற்றி தான் சொல்கிறேன். அதுவும் குறிப்பாக ரஜினியை மட்டும் குறி வைத்து. அண்ணாமலைக்கு பிறகு ரஜினியின் படங்கள் எதுவும் என் இதயத்தை தொடாவிட்டாலும், ரஜினியால் தமிழ் சினிமா கெட்டு விட்டது போல பலர் உரக்க கத்துவது ஏன் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் படங்களை போல அதீத வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் ரஜினியின் படங்களில் என்றுமே வந்ததில்லை. ரஜினியை விமர்சனம் செய்வது அவர்களது உரிமை என்றாலும்... தீவிரமான வார்த்தை பிரயோகங்களை தவிர்ப்பது நல்லது.
என்னை பொறுத்த வரை ரஜினியை போல் யதார்த்தமான தமிழ் நடிகரை பார்த்ததில்லை.. குறிப்பாக 16 வயதினிலே, எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை என பல
படங்கள்.. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டு இருந்த சிகப்பு தோல் மற்றும் மேக் அப் நாயகர்களுக்கு நடுவே அதிரடியாக நுழைந்தது இந்த கருப்பு மின்னல்.. பாலச்சந்தர்,மகேந்திரன் என பலரால் பட்டை தீட்டப்பட்டது.
ஒரு முழு நீள நகைச்சுவை படத்திலும் தன் திறமையை நிரூபித்தவர்...உதாரணம் தில்லுமுல்லு. அந்த படத்தில் மீசையை எடுத்து விட்டு, தேங்காய் சீனிவாசனை பார்க்க செல்வார். தேங்காய் கார்டனில் தண்ணி பாய்ச்சி கொண்டு இருக்கையில், நம்ம ஆளு சொல்வார் "டேய் தோட்டக்காரா". உள்ளே சென்று ரிச் உடை அணிந்து கொண்டு ரஜினியை பார்த்து கேட்பார் தேங்காய் "என்னை இந்த டிரஸ்ல பாத்ததும் ஷாக் ஆயிருப்பியே?". நம்ம ஆளு "இல்ல. தோட்டகாரன் டிரஸ் ல முதல்ல பார்த்ததால தோட்டகாரன்னு சொன்னேன். அது உங்க தப்பு". பல முறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும் என அவர் தொட்ட சிகரங்கள் பல. கமலுடன் நடித்த பல படங்களில் கமலை விட நடிப்பு திறமையை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி. அது நெகடிவ் ரோல் ஆக இருப்பினும்.

எல்லோரும் இன்று ரஜினி கோடி கோடியாக சம்பாதித்த பணத்தை பற்றி பேசுகிறோம். அவரை விமர்சனம் செய்பவர்கள்.. சற்று சிந்திக்க. கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களில் தெரு தெருவாக நடிக்க வாய்ப்பு கேட்டு அவர் அலைந்த நாட்கள் எத்தனை, பட்ட அவமானங்கள் எத்தனை... அது அவரை தவிர யாருக்கு தெரியும். ரஜினியின் சில குழப்பமான பேச்சுக்கள் மற்றும் அண்ணாமலைக்கு பிறகு வந்த படங்களில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனால் ரஜினியை விமர்சிக்க வேட்டியை வரிந்து கட்டி கொண்டு தரம் தாழ்ந்து விமர்சிப்பதும் தவறு. ரஜினி ரசிகன் என்ற பெயரில் அதிக ஆர்வ கோளாறில் அவரை அரசியலுக்கு இழுத்து வர துடிப்பதும் தவறு. அவருக்கும் குடும்பம் உள்ளது. ஆன்மீக தேடல் உள்ளது. விட்டு விடுங்கள். சச்சின், ரஹ்மான், ரஜினி போன்றவர்கள் எத்தனை உச்சத்தை அடைந்தாலும்.. அமைதி காப்பது ஒன்றே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு உதாரணம். ஆரோக்யமான விமர்சனங்களை மட்டுமே முன் வைப்போம். குழாயடி சண்டை வேண்டாம் என்பது என் கருத்து. என்ன சொல்றீங்க........
1 கருத்து:
சச்சின், ரஹ்மான், ரஜினி போன்றவர்கள் எத்தனை உச்சத்தை அடைந்தாலும்.. அமைதி காப்பது ஒன்றே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு உதாரணம்.
nice lines....
கருத்துரையிடுக