தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சுஜாதா...மறந்து விட்டோமா..



இந்த பதிவகத்தை நான் நிறுத்திவிட்டேன் நண்பர்களே. என் புது பதிவகங்கள்: madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com.  அங்கே வருக. சந்திப்போம். நன்றி!






பாமர ஜாதியில் தனி மனிதன்.. படைத்ததினால் உன் பேர் இறைவன்... 

                           சுஜாதா 

மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது எந்திரன் டிரைலர் வெளியீட்டு விழா. எந்திரன் எனும் படம் வர ஆணிவேராக இருந்த சுஜாதா பற்றி ஷங்கர் மட்டும் ஒரு வரி பேசினார். அதுவும் சென்ற முறை மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் ஒருவர் கூட சுஜாதா பற்றி வாய் திறக்கவில்லை. அது குமுதம் இதழில் சுட்டிக் காட்டப்பட்டது. அதனால் போனால் போகட்டும் என்று ஷங்கர் சுஜாதாவை பற்றி ஒரு வரி மட்டும் பேசினார். அது கூட எந்திரனில் வரும் கொசுவை பற்றி சுஜாதா சொன்ன முக்கிய(?) செய்தி பற்றி பேசினார். அடுத்து வந்த ஒருவர் கூட சுஜாதா பற்றி பேசவில்லை. என்றுதான் எழுத்தாளர்களை பற்றி நாம் பேசி இருக்கிறோம்? அது பாரதியாக இருந்தால் கூட. ரைட் விடு...

சரத்குமார் சொன்னார் "எந்திரன் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் பெரும்" என்று. எப்படியெலாம் டெவெலப் ஆகி போய்கிட்டு இருக்காங்க இவிங்க... ஷங்கர் படத்தில் நடிக்க சரத்துக்கு ஆசை என்பதை சூசகமாக தெரிவித்து விட்டு சென்றார்.

வைரமுத்து போப் ஆண்டவரையும் ரஜினியையும் இணைத்து பேசினார். குறும்பு சார் நீங்க...

பலர் கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளை பேசினார். ஒபாமா எந்திரனை பார்த்தால் அதை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய வேண்டும் என்பாராம். எனக்கு தலை சுற்றியது. தனி மனித துதி பாடுதலுக்கு தமிழகத்தில் ஒரு எல்லையே இல்லையா.....முடியல அப்பு.

ரஜினி ரசிகர் ஒருவர் கூறுகிறார் "உலகின் நம்பர் ஒன் சினிமா எந்திரன்". அட்ரா சக்க.. அட்ரா சக்க..

வைரமுத்து அடித்த சூப்பர் சிக்ஸ் "அவதார், டைடானிக் போன்ற படங்களுக்கு இணையான படம் எந்திரன்".  கண்ணை கட்டியது. அப்படியே கிராபிக்ஸ் காட்சிகள் அட்டகாசமாக இருந்தாலும் அது வெள்ளைக்காரன் செய்த காட்சிகள் தானே....அது அவனுக்கு தானே பெருமை சேர்க்கும்? முற்றிலும் நாம் உருவாக்கிய கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்த படம் உலக தரத்துடன் வந்தால் மட்டுமே நாம் பெருமை படலாம். அதுவரை அடக்கி வாசிப்பது நலம். ஏன் இந்த கலவரம்......நிலவரம் தெரியாம?

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட பிரம்மாக்கள்.




                         ஸ்பீல்பெர்க்





                       ஜேம்ஸ் கமேரூன்


      
             பீட்டர் ஜாக்சன் 



Steven Spielberg, Peter Jackson, James Cameron போன்ற பிரம்மாண்டங்களின் பிரம்மாக்கள் படைத்த சாதனை எத்தனை.. ஆஸ்கார் விருதுகளையும், வசூலில்  உலக சாதனையை போட்டி போட்டு கொண்டு இவர்கள் இயக்கிய படங்கள் எத்தனை...ஆனாலும் ஆஸ்கார் மேடையில் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள் இந்த ஜாம்பவான்கள். Lord of the Rings மூன்று பகுதிகளையும் பார்த்து விட்டு பல நாள் தூங்காமல் அதன் பிரம்மாண்ட காட்சி அமைப்புகளை கண்டு மிரண்டு இருக்கிறேன். பீட்டர் ஜாக்சன்....சிங்கம். அவர்களை நம்மோடு  இணைத்து பேசுவது அநியாயத்தின் உச்ச கட்டம்.

எனக்கு தெரிந்து தமிழில் ஜெமினி நிறுவனத்தின் 'சந்திரலேகா' ஏற்படுத்தியதுதான் அசல் பிரம்மாண்டம்.




எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்சனில் வெளியான சுஜாதாவின் நாடகம் "என் இனிய இயந்திரா" பற்றி. அன்றே தொழில்நுட்ப மயமாக்கப்பட்ட தமிழ்நாட்டை பற்றி எதிர்கால சிந்தனையுடன் அருமையாக சிந்தித்து இருப்பார் சுஜாதா. ஒரு காட்சி. வீட்டில் இருந்து ஒருவர் வெளியே கிளம்புவதற்கு முன் அவர் ஒரு கருவியை உபயோகித்து அவர் வேலைக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வார். நெரிசலான போக்குவரத்து என்றால் அவர் வெளியே செல்ல அனுமதி கிடைக்காது. இல்லையெனில் அவர் வெளியே செல்லலாம். இப்படி பல காட்சிகள். ஒரு சில ஆயிரங்கள் போட்டு சிறு செட் அமைத்து எடுக்கப்பட்ட அந்த நாடகம் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

எந்திரன் நல்ல படமாக இருக்கும் பட்சத்தில், அதை கண்டிப்பாக நாம் கொண்டாடுவதில் தவறில்லை. இத்தனை காலம் தமிழ் படங்களை அலட்சியமாக பார்த்த ஹிந்தி சினிமா பசங்களுக்கு இந்த படம் வயிற்றில் புளியை கரைத்தால் சந்தோஷம்.



ஆனால்,  சுஜாதா எனும் மாபெரும் மனிதனை மத்திய அரசுதான் மதிக்கவில்லை.. அது என்றுதான் மதித்தது.. நம் பாரதி, சிவாஜி, நாகேஷ்....உட்பட... எந்திரன் குழுவே... மதிக்காவிட்டாலும்.. எந்திரனில் இருந்து சுஜாதாவை மறைத்து விடாதே...



சுஜாதா.. நீ நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.......










பாடகி ஸ்வர்ணலதா இறந்து விட்டார்









போறாளே பொன்னுதாயி ......



நண்பர்களே... நடிகர் முரளி மறைந்த ரணம் இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி நம்மை தாக்கியுள்ளது. தன் குயில் குரலால் நம்மை கவர்ந்த பாடகி ஸ்வர்ணலதா இன்று மதியம் உடல்நல குறைவினால் இறந்து விட்டார். 37 வயதான அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. டி.பி. வியாதியுடன் அவர் போராட்டம் இன்றோடு முடிந்தது. தமிழில் நீதிக்கு தண்டனை படத்தில் தனது இசை பயணத்தை துவக்கினார். முதல் பாடலிலேயே ஜேசுதாசுடன் பாடும் வாய்ப்பை பெற்றார். கேப்டன் பிரபாகரனில் அவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல் தமிழ் நாட்டை கலக்கியது. சென்னை தம்பியில் "போவோமா ஊர்கோலம்" மிகவும் பிரசித்தி பெற்றது. காதலனில் அவர் பாடிய "முக்காலா முகாபலா" பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கேரளா மாநிலம் பாலக்காடில் பிறந்த ஸ்வர்ணலதா கருத்தம்மா படத்தில் "போறாளே பொன்னுதாயி" பாடல் மூலம் தேசிய விருது பெற்றார்.


அவர் தந்தை சேருகுட்டியும் நல்ல பாடகர். ஹிந்தியில் ஸ்வர்ணலதா ரங்கீலா திரைப்படத்தில் பாடிய "hai rama ye kya hua" இந்தியாவை கலக்கியது. சத்ரியனில் அவர் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடல் காலத்தால் அழியாத மெலடி.

அவர் பாடிய ஹிட் பாடல்களில் சில:
* எவனோ ஒருவன்... (அலைபாயுதே).
* குச்சி குச்சி ராக்கம்மா (பாம்பே).
* மாயா மசிந்த்ரா (இந்தியன்).
* காதலெனும் தேர்வெழுதி (காதலர் தினம்).
* மெட்ராச சுத்தி பாக்க போறேன் (மே மாதம்).
* காதல் யோகி (ரங்கீலா).
* பூங்காற்றிலே (உயிரே).
* அந்தியிலே வானம் (சின்னவர்).
* நீ எங்கே என் அன்பே (சின்னத்தம்பி).
* மாசி மாசம்.. (தர்மதுரை).
* குயில் பாட்டு (என் ராசாவின் மனசிலே).
* ராக்கமா கைய தட்டு (தளபதி).
* மாடத்திலே, மலை கோவில் வாசலில் (வீரா).

இன்னும் பல பாடல்கள். டப்பிங் குரல் தரும் கலைஞராகவும் இருந்திருக்கிறார் இந்த  சின்ன குயில். நம்மை குரலால் மயக்கிய சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

போறாளே பொன்னுதாயி.... எங்களை துக்க கடலில் ஆழ்த்தி விட்டு..... 

சனி, 11 செப்டம்பர், 2010

நகைச்சுவை

Source: sms, friends, books, sites and own thougths..

இடம்: BAR
ஒரு அமெரிக்கன், ஒரு இத்தாலியன் மற்றும் ஒரு ஸ்காட்லான்ட் வாசி மூவரும் பாருக்குள் நுழைந்தனர். மூன்று பேரின் கோப்பையிலும் ஒரு பூச்சி விழுந்து கிடந்தது. அமெரிக்கன் கோவமாக அந்த கோப்பையை வீசி எறிந்தான். இத்தாலியன் பூச்சியை வெளியே வீசி விட்டு குடிக்க தொடங்கினான். ஸ்காட்லான்ட் வாசி பயங்கர கோபத்துடன் அந்த பூச்சியை கையில் எடுத்து அதை மிரட்டினான்.. "மரியாதையா நீ குடிச்ச பீரை என் க்ளாஸ்ல துப்பிடு".
.............................................................................
இடம்: விமானத்திற்கு உள்ளே
                                               
சுனில் தன் பக்கத்து சீட்டில் ஒரு கிளி இருப்பதை கண்டு சற்று வியந்தான். பணிப்பெண்  வந்தாள். "எனக்கு ஒரு டீ" என்றான் சுனில். " எனக்கு ஒரு பெப்சி கொண்டு வாடி" என்றது கிளி. சற்று நேரத்தில் ஒரு பெப்ஸியுடன் வந்து கிளிக்கு தந்தாள் பணிப்பெண். சுனில் கத்தினான் "எனக்கு டீ எங்கே.முட்டாளே போய் கொண்டு வா" என அவளை அதட்டினான். கிளி சொன்னது "அடியே, எனக்கு இன்னும் ஒரு பெப்சி". சிறிது நேரத்தில் அவள் மீண்டும் ஒரு பெப்சியை மட்டும் கிளிக்கு அளித்தாள். சுனில் மிகவும் கோபமாக "ஏண்டி அறிவு கெட்டவளே.. எங்கடி என்னோட டீ?". அவள் பேசாமல் சென்று விட்டாள் .

சிறிது நேரத்தில் இரண்டு விமான காவலாளிகள் வந்தனர். சுனில், கிளி இருவரையும் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே தள்ளி விட்டனர். அப்போது சுனிலிடம்  கிளி சொன்னது "தம்பி, பறக்க தெரியலன்னா ரொம்ப பேசக்கூடாது".
.....................................................................................................................................

இடம்: உயிரியல் பூங்கா.

    

குரங்கு: அண்ணே, எதுக்கு அந்த ஆளை அடிச்சி கொன்னுட்ட..
புலி: என்னை பார்த்து அவன் என்ன சொன்னான் தெரியுமா?
குரங்கு: என்ன அண்ணே சொன்னான்?
புலி:  "எவ்ளோ பெரிய பூனை!"
.....................................................................................................................................

இடம்: அலுவலகம்.


ஒரு கம்பனியின் மானேஜரை காண அவர் மனைவி திடீரென அலுவலகத்திற்கு வந்து விட்டார். அங்கு அவள் கணவன் மடியில் இளம் பெண் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். உடனே உஷார் ஆனா கணவன், அந்த இளம் பெண்ணிடம் சொன்னான் "நான் சொல்வதை டைப் செய்..... ஒரு நாற்காலி வைத்துகொண்டு எங்களால் வேலை செய்ய முடியாது. உடனே இன்னும் ஒரு நாற்காலி அனுப்பி வைக்கவும்".
..................................................................................................

இடம்: நெடுஞ்சாலை.



பைக்கில் குடித்துவிட்டு வேகமாக வந்து கொண்டு இருந்த ராசுவை  மடக்கினார் போலீஸ்.
ராசு: "சார் நான் சொல்றத கொஞ்சம்"
போலீஸ்: "வாயை மூடு"
ராசு: "சார் நான்.."
போலீஸ்: "மூடுடா வாயை. உன்னை ஜெயில்ல இன்னைக்கி ராத்திரி போடுறேன். நாளை காலை உயர் அதிகாரி வந்ததும் நீ போகலாம். அவர் மகளுக்கு இன்று கல்யாணம். அந்த மகிழ்ச்சியில் உன்னை உடனே  விட்டு விடுவார்"
 ராசு: "அது நடக்காது சார்"
போலீஸ்: "ஏன்டா"
ராசு: "நாந்தான் சார் மாப்ள"
.....................................................................

புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி மரணம்

தமிழ் சினிமாவில் தன் யதார்த்த நடிப்பால் நம் நெஞ்சில் நின்ற நடிகர் முரளி இன்று காலை இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சி அளித்தது. சில நாட்களுக்கு முன்புதான் பல தொலைக்காட்சி பெட்டிகளில் தன் மகனுடன் பேட்டி அளித்திருந்தார். என்றும் இளமை மாறாமல் இருந்த அந்த நடிகன் இனி நம்மிடம் இல்லை.

                                                   Film actor Murali. File Photo




                                                   
                                                  தந்தை மற்றும் மகனுடன்..முரளி 




                                               
                                                          சில நாட்களுக்கு முன்பு....

'இதயம்' படம் மூலமாக நம் இதயம் திருடிய முரளி இதய வலியால் இறந்தது வேதனையாக இருக்கிறது.

                                                       


தமிழ் சினிமாவில் வெகு சில யதார்த்த நாயகர்கள் பட்டியலில் முத்துராமன், மோகன் போன்றவர்களுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்பிய முரளி மறைவு நமக்கு பேரிழப்புதான். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

விமர்சனம் பற்றி விமர்சனம்

திரை விமர்சனம் என்ற பெயரில் தமிழ் தொலைக்காட்சிகளில் பல்லாண்டு காலமாக சில நிகழ்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.. ஆனால் அவை எல்லாம் விமர்சனங்கள் தானா என்று பார்த்தால் சத்தியமாக இல்லை என்பதில் மாற்று கருத்து இல்லை. திரை முன்னோட்டங்களாகவே அவை இருக்கின்றன. கட்சிக்கு ஒரு டி.வி.... அது போல டி.விக்கு ஒரு திரைப்பட நிறுவனம்..என்று இருந்தால் எங்கே நடுநிலை விமர்சனத்தை நாம் எதிர்பார்க்க முடியும். அந்தந்த டி.வியின் சொந்த படங்கள் ஓடாவிட்டாலும் 100 நாட்களுக்கு அதுதான் டாப்-10 லிஸ்டில் நம்பர் 1. திரை அரங்குகளில் வசூலை வாரி குவித்தாலும்.. எதிரி தொலைக்காட்சியின் படமாக இருந்தால்.. நாம் பார்க்கும் தொலைக்காட்சியில் இடம் பெறாது.

                                                   சுரேஷ் (புகைப்படம் நன்றி சன் டிவி)

நாம் பல வருடங்களாக பார்த்து வரும் டாப்-10 நிகழ்ச்சியின் நாயகன் சுரேஷ். சார்.. உங்களுக்கு அலுக்கவில்லையா.. சொன்னதையே திரும்ப சொல்லுவதை.. "இன்னைக்கி.. 7 -வது , 6 -வது, 5 -வது இடங்கள் காலியா இருப்பதால நாம நேரா 4 -வது இடத்துக்கு போவோம்"..."ஏற்கனவே இந்த படாத பற்றி தேவையான அளவு அலசிட்டதால" இந்த டயலாக்க மாத்துங்க சார்.


அடுத்து நம்ம ரத்னா மேடம். செம யூத் மேடம் நீங்க. ஆனா நீங்களும் வர்றீங்க.. படத்துல நடிச்சவங்க பேரு சொல்றீங்க.. ரெண்டு லைன் கதை சொல்றீங்க.. கடைசில "மொத்தத்தில்"  அப்டின்னு சொல்லிட்டு போய்டறீங்க. எங்க மேடம் விமர்சனம். நீங்க என்ன செய்வீங்க பாவம். கலாநிதி சார், எங்களுக்கு மாற்றம் தேவை.

                                                     ரத்னா (புகைப்படம் நன்றி சன் டிவி)  
                                                            

உச்சகட்ட இம்சை நம்ம ஹாசினி பேசும் படம். எப்போதாவது நல்ல..தைரியமான விமர்சனம் செய்பவர் சுகாசினி என்றாலும்... நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் சுயபுராணம் பாடி மேடம் குடுக்கும் இம்சை இருக்கிறதே.. "நாங்க அந்த காலத்துல நடிக்கும்போது.." என்பது.. "மணி, கமல் மாதிரி இனிமே யாரு" என்பது..."எனக்கும் கேமரா, எடிட்டிங், உலக சினிமா தெரியும்" என்பது.... மேடம் எந்த காலத்துல இருக்கீங்க. பர்மா பஜாரில் C.D. விற்கும் இளைஞர்களுக்கு தெரியாத உலக சினிமாவா?

                                                        Burma Bazaar photo

அகிரோ குரசோவா முதல்....அவதார் வரை காட்சிக்கு காட்சி அலசி..நல்ல உலக சினிமா பற்றி அவர்கள் பேசுவதை கண்டு அசந்து இருக்கிறேன். நீங்க தமாசு பண்ணாதீங்க மேடம். நாங்களும் ஓரளவு உலக சினிமா பார்க்கும் ஜாதிதான். புடவையில் அம்சமாக இருக்கும் நீங்கள்.. ஏன் நாகரீக(?!) உடை என்ற பெயரில் எதையாவது மாட்டி கொண்டு வந்து எங்கள் வயிற்றில் புளியை கரைக்காதீர்கள்..நல்லா இருப்பீங்க..

                                                  

தமிழில் ஒரு தொலைக்காட்சியில் கூட நடுநிலை விமர்சனம் வராதது..வருந்ததக்கது.


வடக்கத்தி சேனல்களில் பொளந்து கட்டுகிறார்கள். குறிப்பாக CNN-IBN ஆங்கில தொலைக்கட்சியில் வரும் Now Showing எனும் திரை விமர்சனம். ராஜீவ் மசந்த் என்பவர் நடத்தும் நிகழ்ச்சி.


                                                                       ராஜீவ் மசந்த்

 மனிதருக்கு சினிமா பற்றிய புரிதல் முழுமையாக இருக்கிறது. எந்த  படமாக இருந்தாலும் 5 நிமிடம்தான் விமர்சிப்பார். ஆனால் மிகத்தெளிவாக... நெத்தியடி அடிக்கிறார். ஒரு நாள், AAG என்ற ஹிந்தி சினிமா விமர்சனம் பார்த்தேன். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் நடித்த படம்(ஷோலே ரீமேக்).  படம் படுமட்டம்  என கூறிய ராஜீவ் மசந்த், ஒரு அழுகிய முட்டையை காமெராவை நோக்கி எறிந்து  விட்டு சொன்னார் "இதுதான் இந்த படத்திற்கு நான் தரும் மார்க்" என்று. சற்று கற்பனை செய்து பாருங்கள்..ரஜினி படத்தை இப்படி யாராவது விமர்சனம் செய்ய முடியுமா இங்கு? ஒரு வார்த்தை பேச முடியுமா?

                                                                        ராஜீவ் மசந்த்


கேட்டால் சொல்வார்கள்.. நாங்கள் இரவு பகலாக உழைத்து பல கோடிகள் செலவு செய்து எடுக்கும் படத்தை 10 நிமிடத்தில் மட்டமாக எப்படி விமர்சிக்கலாம் என்று. நமக்கு தெரிந்து எந்த நல்ல விமர்சகனும் நல்ல படத்தை மட்டமாக விமர்சித்திருக்க மாட்டான். அங்காடி தெரு, மொழி போன்ற படங்களை விமர்சகர்கள் கொண்டாடியதை மறக்க கூடாது.

நல்ல சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்களையும்.. விசில் அடிச்சான் குஞ்சுகளையும் கணக்கில் கொண்டு கதை, திரைக்கதை இல்லாத... வன்முறை மற்றும் ஆபாசம் மிகுந்த படங்கள் எடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. ஆனந்த விகடன், உயிர்மை போன்ற வெகு சில இதழ்கள் மட்டுமே நடுநிலை விமர்சனங்களை அளிக்கின்றன.

ஆனால்.. இணையதளம் மற்றும் Blogspot போன்றவற்றில் நல்ல விமர்சனங்கள் வருவது ஒன்றே ஆறுதல். ஆனால்.. சராசரி மக்கள் மத்தியில் இந்த விமர்சனங்கள் நேரடியாக சென்று சேர இன்னும் நாட்கள் ஆகும்.

பார்ப்போம். என்று, எவர்க்கும் அஞ்சாத சினிமா விமர்சனம் தமிழ் தொலைக்காட்சியில் வருகிறதென்று...(வருமா?).
                                                        

சனி, 4 செப்டம்பர், 2010

பன்னீர் சோடாவும் பல்லவனும்

            

அது 80-களின் இறுதி மற்றும் 90-களின் தொடக்க  கால கட்டங்கள்.. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அன்று படித்து..இன்று 30 வயதினை தொட்டிருக்கும் நண்பர்களுக்கு குறிப்பாக இந்த கட்டுரை.  அண்ணா சாலை திரை அரங்குகளில் படம் பார்க்க பச்சை நிற பல்லவனில் 75 அல்லது 85 பைசா டிக்கெட் எடுக்க ஒரு ரூபாய் நடத்துனரிடம் தந்தவுடன், அவர் திரும்ப தரும் 5 மற்றும் 10 அலுமினிய பைசாக்கள் மற்றும் நாலு அணாக்கள்  நினைவிருக்கிருதா நண்பர்களே..

                                5paisa: pak 5paisa f 1974                                 
                              

சொகு பேருந்து, குளிர் சாத பேருந்து என பல வகை வண்ணமின்றி...... சீரான பச்சை நிறத்தில் ஜாதி மத பேதமின்றி நம்மை சுமந்து சென்றால் பல்லவன் தாய் அன்று..
              
                               



ஊரில் இருக்கும் உறவுகளிடம் பேச பக்கத்துக்கு வீட்டு லான்ட் லைனில் அவசர அவசரமாக பேசிய நாட்கள்... அன்பு காதலிக்கு பப்ளிக் பூதத்தில் கால் கடுக்க நின்று பல ஒரு ரூபாய்களை  அதன் வாயில் போட்டு மணிக்கணக்கில்  பேசிய அந்த நாட்கள்....


                                              

            
பள்ளி காலங்களில் 25 பைசா நம்மிடம் இருந்தால் நாம்தான் சிற்றரசு.. எட்டணா இருந்தால் நாம்தான் பேரரசு... தேன் மிட்டாய்களையும், பர்பி மிட்டாய்களையும் சட்டை பாக்கெட்டில் போட்டு கொண்டு ஆசிரியருக்கு தெரியாமல் வகுப்பில் தின்ற அந்த நாட்கள்...


                                                 [ThirunelveliInippu.jpg]


தாகம் என்றதும் ஐஸ் போட்ட பன்னீர் சோடா ஒன்று குடித்து விட்டு..களைப்பின்றி விளையாடி திரிந்த அந்த நாட்கள்....

                                           


ஆயிரம் இ-மெயில், சாட், மொபைல் லொட்டு லொசுக்குகள் வந்தாலும்.. நம் கைப்பட இன்லான்ட் லெட்டரில் நம் தாய்க்கு கடிதம் எழுதிய அந்த நாட்கள்....  எழுத்து பிழைகள் எத்தனை இருந்தாலும்... அன்பு எனும் அட்சய பாத்திரமாக நம் தாய் நமக்கு கடிதம் எழுதிய அந்த நாட்கள்....



                                      

எல்லாம் தொலைந்து போய் விட்டன என்பதை நினைக்கையில்... நாம் எத்தனை லட்சங்கள் சம்பாதித்தாலும்...நாம் தொலைத்தது எத்தனையோ.. இன்று ஏதோ ஒரு கட்டிடத்தில் நடுநிசியில் ஐ.டி . மற்றும் B.P.O நிறுவனங்களில் தூக்கத்தை தொலைத்து விட்ட பலர், மார்க்கெட்டிங் வேலை நிமித்தமாக மாநகர நெரிசலில் சுற்றி திரியும் நண்பர்கள் பலர், சொந்த தொழில் செய்து குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க இயலாமல் நம்மில் தவிக்கும் பலர்..

                                            


 இன்று ஞாயிற்றுகிழமை ஒரு நாள் நமது நினைவுகளை அசை போட இந்த கட்டுரை உதவினால் எனக்கு மகிழ்ச்சி... ஒரு வேண்டுகோள்... மீண்டும் ஒரு முறையாவது.. இன்லான்ட் லெட்டர், பப்ளிக் போன், பச்சை நிற பல்லவன், தேன் மிட்டாய், பன்னீர் சோடா......அனுபவித்து பாருங்க நண்பா... இந்த ஞாயிறு இல்லை எனில் அடுத்த ஞாயிறாவது..........


                                    

ரஜினி ரசிகனின் கண்ணீர் கடிதம்

நன்றி: ஜூனியர் விகடன்.

ரஜினி ரசிகனின் கண்ணீர் கடிதம்:

தலைவா. வணக்கம்.

சந்தோசமாக இருக்கிறீர்களா? நாங்கள் சந்தோசமாக இல்லை. "போக்குவரத்து நெரிசல் .கூட்டம் அதிகம். கல்யாணத்திற்கு வர வேண்டாம்" என்று எங்களிடம் சொன்னீர்கள். இதே வார்த்தையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது சொல்வீர்களா? அப்போது மட்டும்
போக்குவரத்து நெரிசலும், கூட்டமும் இருக்காதா?.

உங்கள் மூத்த மகள் திருமணம் சென்னையில் நடந்த போது கூட காரில் வந்த பணக்காரர்களை வரவேற்றீர்கள். சத்யநாராயணா எங்களை வாசலிலேயே விரட்டி அடித்தார்.

alt

ஆனால் நடிகர் பிரபு தன் மகன் கல்யாணத்திற்கு முதல் நாள் ரசிகர்களை அழைத்து மணமக்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.


 நீங்கள் மட்டும் ஏன் இப்படி? கட் அவுட் வைக்க, தோரணம் கட்ட மட்டும் நாங்கள் வேண்டுமா?. உங்களை மட்டமாக பேசிய ராமதாஸ், திருமாவளவன் வீட்டில் சென்று பத்திரிக்கை வைத்தீர்கள். எங்களை வாசலில் நிறுத்தினீர்கள்.

AR Rahman,Chief Minister M. Karunanidhi,Suriya,Jayam Ravi,Narain,Jayaprada,Kushboo

                                                
தேர்தல் வரும்போது மட்டும் "இந்த கட்சிக்கு வோட்டு போடு அந்த கட்சிக்கு வோட்டு போடு என்று சொல்லிவிட்டு இமய மலைக்கு போய் விடுவீர்கள். நாங்களும் செய்வோம். பிறகு மறந்து விடுவீர்கள். உங்கள் படம் நன்றாக ஓடிய போது எங்களுக்கு என்றாவது நன்றி தெரிவித்ததுண்டா? பாபா படம் வந்த போது பா.மா.க.வினர் பெட்டியை தூக்கி கொண்டு ஓடிய போது நடந்த சண்டையில் எங்கள் உடம்பில் விழுந்த அடி இன்னும் வலிக்கிறது. ஆனால் நீங்கள் அன்புமணி வீட்டிற்கு சென்று பத்திரிகை வைக்கிறீர்கள். நாகரீகம் உள்ள மனிதர் என உங்களுக்கு பட்டம் கிடைக்கலாம். ஆனால் எங்கள் நெஞ்சில் ரத்தம் வடிகிறது.

AR Rahman,Chief Minister M. Karunanidhi,Suriya,Jayam Ravi,Narain,Jayaprada,Kushboo

எங்களை பார்த்து வளர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள் கூட இன்று எங்களை காயலான் கடை பொருள் போல பார்த்து  ஏளனமாக சிரிக்கிறார்கள். 

காலம் எல்லாம் தாங்கி கொள்ள எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லை. அது ரத்தமும் சதையினாலும் ஆனது. புரிந்து கொள் தலைவா...

இப்படிக்கு,
ஈர விழிகளுடன்...
உங்கள் ரசிகன்.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

உலகின் மிகச்சிறந்த நடிகன்

உலகின் மிகச்சிறந்த நடிகன்....அவன் செய்த ஒரே தவறு தமிழகத்தில் பிறந்தது...தேசிய அளவில் கூட அவன் முகம் வடக்கத்தி சக்திகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.. ஒரு முறை கூட அங்கீகாரம் கிடைக்கவில்லை. அமெரிக்க தேசத்தில் பிறந்திருந்தால் பல ஆஸ்கார் விருதுகள் அவன் காலடியில் வந்து விழுந்திருக்கும். அதுவும் நல்லதுதான். இல்லாவிட்டால் தமிழர்களாகிய நாம் அந்த மாபெரும் கலைஞனை இழந்திருப்போம். ஆம்.. நடிகர் திலகத்தை பற்றிதான் இந்த கட்டுரை. சிவாஜியை மத்திய அரசு அவமதித்தது ஒன்றும் ஆச்சர்யமல்ல. மகாகவி பாரதி, வ.உ.சி, நாகேஷ் முதல் சமீபத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வரை மத்திய அரசு தமிழனை அங்கீகரிக்காமல் இருப்பதும், சீண்டி பார்ப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

                                                                            

சிவாஜி மீது பிரகாஷ்ராஜ் எனும் நடிகருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. பல முறை அவரை நையாண்டி செய்வதில் செல்லத்துக்கு ஒரு ஆத்ம திருப்தி. வெள்ளித்திரை படத்தில் செல்லமும் ப்ரித்விராஜூம் பேசும் ஒரு காட்சியில் "அம்மா செத்தால் வாயில் அடித்து கொண்டு அழுவோம் நாங்கள்(தமிழ் நடிகர்கள்..குறிப்பாக சிவாஜி). ஓவர் ஆக்டிங் செய்தாலும் நாங்கள் நடிகர்கள்தான்" என கிண்டல் செய்திருப்பார் செல்லம். இன்னும் பல உதாரங்கள் உண்டு. நடிக்க தெரியாதவன் ஓவர் ஆக்டிங் செய்வதற்கும், நடிப்பின் சிகரம் சற்று மிகையாக நடிப்பதற்கும் மிக பெரிய வித்யாசம் உள்ளது செல்லமே.


                                                         

இறந்து போன ஒரு கலைஞனை கிண்டல் செய்வது எந்த நாகரீகத்தில் சேர்த்தி?. யதார்த்த நடிப்பு.. யதார்த்த நடிப்பு என்று எதை சொல்கிறாய் செல்லம். வசூல் ராஜா படத்தில் ஒரு காலேஜ் டீன் லூசு மாதிரி சிரிப்பதையா? அல்லது குங்கும போட்டும் பட்டு சட்டையும் போட்டு கொண்டு "அவன தூக்குடா ஏய்.." என கத்துவதையா?  எங்கள் சிங்கம் சிவாஜி ஹரிச்சந்திரா, முதல் மரியாதை, தேவர் மகன் என பல கால கட்டங்களில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதை உலகறியும்.

                                
                                                       

எங்கள் சிங்கம் தொடாத பாத்திரங்கள் இல்லை. எட்டாத சிகரங்கள் இல்லை.

                                                  

அழகு என்றாலும் .....
                                                           


கம்பீரம் என்றாலும்.......

                                                           


ஸ்டைல் என்றாலும்.....

                                                     


பாசம் என்றாலும்...

                                                 


ஒரே ஷாட்டில் உலகில் எவருமே பேசாத  பல பக்க வசனம் என்றாலும்...
 (படம்: ராஜா ராணி)       
                                             


உலக சபையில் அங்கீகாரம்  பெறுதல் என்றாலும்....


                                    

முழு நீள நகைச்சுவை என்றாலும்................

                             


புரட்சிகர வசனங்கள் என்றாலும்....

                         

ஆன்மிகம் என்றாலும்....


                                  


நட்பு என்றாலும்.........

                                 


உலக அளவில் அங்கீகரம் பெற முழு தகுதி வாய்ந்த சிங்கத்தமிழனை தேசிய அளவில் கூட தெரியவிடாமல் இருட்டடிப்பு செய்த மத்திய அரசே....தலை கவிழ்ந்து வெட்கப்படு..

எங்கள் பொக்கிஷத்தை மேலும் சீண்டுவதை விட்டு விடு செல்லமே... பிள்ளை பிராயத்தில் வறுமையில் சுழன்று, உணவுக்கு அலைந்து சிவாஜி பட்ட ரணங்கள் ஆயிரம்.  இன்று எங்கள் இதயங்களில் குடி கொண்டு இருக்கும் மகா கலைஞனின் ஆத்மாவை குதராதே.. அது அமைதியாக இளைப்பாரட்டும்....



எங்கள் சிங்கம்...அமைதியாக இளைப்பாரட்டும்...



வந்தாரை வாழ வைக்கும் பூமி இது செல்லம்...வாழ்க நீ பல்லாண்டு...