தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மல்டிப்ளெக்ஸ் மாயாஜாலம்

                                      
                                                         Booking online ticket Inox Vizag
                                                        


 மல்டிப்ளெக்ஸ் எனும் மாயாஜால உலகம் மதராசில் இன்று ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகிவிட்டது.. இளைய சமூகத்திற்கு.. சிறந்த விசுவல் எபெக்ட் அல்லது 3D தொழில் நுட்பத்துடன் நல்ல ஒரு ஆங்கில படம் வந்தால் மட்டுமே நான் மல்டிப்ளெக்ஸ் செல்வதுண்டு. மதுரை மாநகரில் அருவாள் தூக்கி கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது, தமிழ் சினிமாவில் தீராத வியாதியான காதல் காட்சிகள் மற்றும் யதார்த்த சினிமா என்ற பெயரில் கொடூரமான வன்முறை காட்சிகள் கொண்ட படங்களுக்கு மல்டிப்ளக்ஸில் பணத்தை இறைப்பது என்னை பொறுத்தவரை தண்ட செலவு...அதுவும் என் போன்ற நடுத்தர வர்க்கத்தில் வேலைக்கு போகும் ஆண் மகனுக்கு.   


                                                       




 சில காலமாக சத்யம் தியேட்டரில் நான் சந்திக்கும் தலையாய  பிரச்னை "கோக கோலா". 450ml fountain coke விலை 45 ரூபாய் என டிஸ்ப்ளே செய்யப்பட்டு இருக்கும். ஆனால் பெரும்பாலும் அது கிடைக்காது. 600ml (55 ருபாய்) பாட்டிலை தலையில் கட்ட பார்ப்பார்கள். ஏன் 450ml இல்லை என்று கேட்டால் தீர்ந்து விட்டது என்பார்கள். நான் கேட்டேன் "தீந்து போச்சா? என்னங்க சொல்றீங்க? மிசின் பட்டனை தட்டினால் 600ml coke வரும்... ஆனால் 450ml வராதா?". பதில் இல்லை. "டேய் டேய் செகப்பு சட்ட" என சொல்வதை கண்டு கொள்ளாமல் அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க தொடங்கி விட்டார்.  என்னங்கடா உங்க 5 ஸ்டார் ஹோட்டலு... என கவுண்டமணி சொன்னது நினைவில் வந்தது... ஒரு சூடான நாய்(அதாங்க...ஹாட் டாக்) விலை ஜஸ்ட் 50 ருபீஸ். அதை ஆர்டர் செய்தால்.. ஜில்லென்று ஒரு ரொட்டியை கொடுத்தார் செகப்பு சட்டை. நான் கேட்டேன் "ஹாட் டாக் எதுக்கு ஜில் என்று இருக்கிறது?" மீண்டும் பதில் இல்லை. ஆங்கிலத்தில் மிரட்டினால் தான் இங்கெல்லாம் பருப்பு வேகும் போல. நம்ம தான் அதுலயும் அரை குறையாச்சே... .


                                                      




சரி.. அண்ணா நகர் அருகே உள்ள பீ.வீ.ஆர். சினிமாஸ் சென்று பார்ப்போம் என்று அங்கே நுழைந்தேன்....பிரம்மாண்டமான  food court கண்ணில் பட்டது. பெப்சி எவ்ளோ என்றேன்...50 ருபாய் என்றான் ப்ளூ சட்டை.. 50 ரூபாய் நீட்டினேன்.. வாங்கவில்லை. ஏன் என்றேன்.. "இங்க குறைந்தது 100 ரூபாய்க்கு வாங்க வேண்டும்" என்றான். நான் கேட்டேன் "நான் ஒரு ஆளு எப்டி நூறு ரூவாக்கு திங்க முடியும்?" பதில் இல்லை.


இந்த மல்டிப்ளெக்ஸ் உள்ளே நுழைந்தால், நம்ம இளசுகள் முதல் பெருசுகள் வரை ப்ளூ ஜீன்ஸ் போட்டு கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தனர்....அதுவும் கத்திரி வெயிலில். வெள்ளைக்காரன் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்காக நீடித்து உழைக்க கண்டு பிடித்த ஜீன்ஸ் நிலைமை இங்கே இப்படி. நடக்கட்டும்.....


ஆக மொத்தத்தில் ஒரு வாரம் நைட் ஷிப்ட் செய்து சம்பாதித்த காசு இரண்டு மணி நேரத்தில் கரைந்து போனது.... மொக்கையாக ஒரு படம் பார்த்து விட்டு காசை கரி ஆக்கிய வெறுப்பில்  வெளியே வந்த என் நண்பர்  ஒருவனை தேடினார். அவன் வேறு யாரும் இல்லை. டிக்கெட் கவுன்டரில்...."என்ஜாய் தி மூவி சார்" என்றானே டிக்கெட் குடுக்கும் பையன்...ஆள் கண்ணில் படவில்லை. இனி வருசத்துக்கு ஒரு முறைதான் மல்டிப்ளெக்ஸ்... அதுவும் தனியாக போவனும். ரன் படத்தில் விவேக் சொல்வது போல "மெட்ராஸ்ல நெறைய புடுங்கிகள் இருக்கிறார்கள்" என்பது உண்மைதான்.. டிக்கெட், ஹாட் டாக்.. என நிறைய புடுங்கி விட்டார்கள்...போதுமடா சாமி....


கொசுறு: சத்யம் தியேட்டரின் அடுத்த மல்டிப்ளெக்ஸ் உதயமாகிவிட்டது... திரை பெயர்கள்: ஸ்பாட்,  கைட்ஸ், கார்வ், வீவ், plush மற்றும் blush.

1 கருத்து:

Unknown சொன்னது…

//ஆக மொத்தத்தில் ஒரு வாரம் நைட் ஷிப்ட் செய்து சம்பாதித்த காசு இரண்டு மணி நேரத்தில் கரைந்து போனது.... மொக்கையாக ஒரு படம் பார்த்து விட்டு காசை கரி ஆக்கிய வெறுப்பில் வெளியே வந்த என் நண்பர் ஒருவனை தேடினார். அவன் வேறு யாரும் இல்லை. டிக்கெட் கவுன்டரில்...."என்ஜாய் தி மூவி சார்" என்றானே டிக்கெட் குடுக்கும் பையன்...ஆள் கண்ணில் படவில்லை. இனி வருசத்துக்கு ஒரு முறைதான் மல்டிப்ளெக்ஸ்... அதுவும் தனியாக போவனும்.//
multiply the money & go to multiplex
tamila sollanumnna
தனியா போறதுக்கு....
எதுக்கு தலைவா மல்டிபிலெக்ஸ் ?

கருத்துரையிடுக