ரஜினி ரசிகனின் கண்ணீர் கடிதம்:
தலைவா. வணக்கம்.
சந்தோசமாக இருக்கிறீர்களா? நாங்கள் சந்தோசமாக இல்லை. "போக்குவரத்து நெரிசல் .கூட்டம் அதிகம். கல்யாணத்திற்கு வர வேண்டாம்" என்று எங்களிடம் சொன்னீர்கள். இதே வார்த்தையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது சொல்வீர்களா? அப்போது மட்டும்
போக்குவரத்து நெரிசலும், கூட்டமும் இருக்காதா?.
உங்கள் மூத்த மகள் திருமணம் சென்னையில் நடந்த போது கூட காரில் வந்த பணக்காரர்களை வரவேற்றீர்கள். சத்யநாராயணா எங்களை வாசலிலேயே விரட்டி அடித்தார்.
ஆனால் நடிகர் பிரபு தன் மகன் கல்யாணத்திற்கு முதல் நாள் ரசிகர்களை அழைத்து மணமக்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

நீங்கள் மட்டும் ஏன் இப்படி? கட் அவுட் வைக்க, தோரணம் கட்ட மட்டும் நாங்கள் வேண்டுமா?. உங்களை மட்டமாக பேசிய ராமதாஸ், திருமாவளவன் வீட்டில் சென்று பத்திரிக்கை வைத்தீர்கள். எங்களை வாசலில் நிறுத்தினீர்கள்.
தேர்தல் வரும்போது மட்டும் "இந்த கட்சிக்கு வோட்டு போடு அந்த கட்சிக்கு வோட்டு போடு என்று சொல்லிவிட்டு இமய மலைக்கு போய் விடுவீர்கள். நாங்களும் செய்வோம். பிறகு மறந்து விடுவீர்கள். உங்கள் படம் நன்றாக ஓடிய போது எங்களுக்கு என்றாவது நன்றி தெரிவித்ததுண்டா? பாபா படம் வந்த போது பா.மா.க.வினர் பெட்டியை தூக்கி கொண்டு ஓடிய போது நடந்த சண்டையில் எங்கள் உடம்பில் விழுந்த அடி இன்னும் வலிக்கிறது. ஆனால் நீங்கள் அன்புமணி வீட்டிற்கு சென்று பத்திரிகை வைக்கிறீர்கள். நாகரீகம் உள்ள மனிதர் என உங்களுக்கு பட்டம் கிடைக்கலாம். ஆனால் எங்கள் நெஞ்சில் ரத்தம் வடிகிறது.
எங்களை பார்த்து வளர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள் கூட இன்று எங்களை காயலான் கடை பொருள் போல பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள்.
காலம் எல்லாம் தாங்கி கொள்ள எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லை. அது ரத்தமும் சதையினாலும் ஆனது. புரிந்து கொள் தலைவா...
இப்படிக்கு,
ஈர விழிகளுடன்...
உங்கள் ரசிகன்.
2 கருத்துகள்:
நக்கீரனுக்கு நேரில் சென்று பத்திரிகை வைத்தால், ஜூ.வி.க்கு எரியத் தானே செய்யும்.
ஜூ.வி.க்கு மீண்டும் 100 லிட்டர் ஜெலூசில் பார்சல்!
சினிமாவே வாழ்க்கை என்று வெறி பிடித்து அலையும் அனைவர்க்கும் இதுதான் சினிமா என்று உணர ஒரு சந்தர்ப்பம். ரசிகனாக மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கலாம்.வெறியராக மானம் மரியாதை பணம் நேரம் இழப்பது பெரிய மடத்தனம்.புரிந்து கொண்டால் சரி.நடிப்பது அவர் தொழில் ,அதுவே அவர் வாழ்க்கையில்லை. ரசிப்பதே தொழிலாகவும்,வாழ்க்கையுமாக இருக்கலாமா?
கருத்துரையிடுக