போறாளே பொன்னுதாயி ......
நண்பர்களே... நடிகர் முரளி மறைந்த ரணம் இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி நம்மை தாக்கியுள்ளது. தன் குயில் குரலால் நம்மை கவர்ந்த பாடகி ஸ்வர்ணலதா இன்று மதியம் உடல்நல குறைவினால் இறந்து விட்டார். 37 வயதான அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. டி.பி. வியாதியுடன் அவர் போராட்டம் இன்றோடு முடிந்தது. தமிழில் நீதிக்கு தண்டனை படத்தில் தனது இசை பயணத்தை துவக்கினார். முதல் பாடலிலேயே ஜேசுதாசுடன் பாடும் வாய்ப்பை பெற்றார். கேப்டன் பிரபாகரனில் அவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல் தமிழ் நாட்டை கலக்கியது. சென்னை தம்பியில் "போவோமா ஊர்கோலம்" மிகவும் பிரசித்தி பெற்றது. காதலனில் அவர் பாடிய "முக்காலா முகாபலா" பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கேரளா மாநிலம் பாலக்காடில் பிறந்த ஸ்வர்ணலதா கருத்தம்மா படத்தில் "போறாளே பொன்னுதாயி" பாடல் மூலம் தேசிய விருது பெற்றார்.
அவர் தந்தை சேருகுட்டியும் நல்ல பாடகர். ஹிந்தியில் ஸ்வர்ணலதா ரங்கீலா திரைப்படத்தில் பாடிய "hai rama ye kya hua" இந்தியாவை கலக்கியது. சத்ரியனில் அவர் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடல் காலத்தால் அழியாத மெலடி.
அவர் பாடிய ஹிட் பாடல்களில் சில:
* எவனோ ஒருவன்... (அலைபாயுதே).
* குச்சி குச்சி ராக்கம்மா (பாம்பே).
* மாயா மசிந்த்ரா (இந்தியன்).
* காதலெனும் தேர்வெழுதி (காதலர் தினம்).
* மெட்ராச சுத்தி பாக்க போறேன் (மே மாதம்).
* காதல் யோகி (ரங்கீலா).
* பூங்காற்றிலே (உயிரே).
* அந்தியிலே வானம் (சின்னவர்).
* நீ எங்கே என் அன்பே (சின்னத்தம்பி).
* மாசி மாசம்.. (தர்மதுரை).
* குயில் பாட்டு (என் ராசாவின் மனசிலே).
* ராக்கமா கைய தட்டு (தளபதி).
* மாடத்திலே, மலை கோவில் வாசலில் (வீரா).
இன்னும் பல பாடல்கள். டப்பிங் குரல் தரும் கலைஞராகவும் இருந்திருக்கிறார் இந்த சின்ன குயில். நம்மை குரலால் மயக்கிய சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
போறாளே பொன்னுதாயி.... எங்களை துக்க கடலில் ஆழ்த்தி விட்டு.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக