அது 80-களின் இறுதி மற்றும் 90-களின் தொடக்க கால கட்டங்கள்.. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அன்று படித்து..இன்று 30 வயதினை தொட்டிருக்கும் நண்பர்களுக்கு குறிப்பாக இந்த கட்டுரை. அண்ணா சாலை திரை அரங்குகளில் படம் பார்க்க பச்சை நிற பல்லவனில் 75 அல்லது 85 பைசா டிக்கெட் எடுக்க ஒரு ரூபாய் நடத்துனரிடம் தந்தவுடன், அவர் திரும்ப தரும் 5 மற்றும் 10 அலுமினிய பைசாக்கள் மற்றும் நாலு அணாக்கள் நினைவிருக்கிருதா நண்பர்களே..
சொகு பேருந்து, குளிர் சாத பேருந்து என பல வகை வண்ணமின்றி...... சீரான பச்சை நிறத்தில் ஜாதி மத பேதமின்றி நம்மை சுமந்து சென்றால் பல்லவன் தாய் அன்று..
ஊரில் இருக்கும் உறவுகளிடம் பேச பக்கத்துக்கு வீட்டு லான்ட் லைனில் அவசர அவசரமாக பேசிய நாட்கள்... அன்பு காதலிக்கு பப்ளிக் பூதத்தில் கால் கடுக்க நின்று பல ஒரு ரூபாய்களை அதன் வாயில் போட்டு மணிக்கணக்கில் பேசிய அந்த நாட்கள்....
பள்ளி காலங்களில் 25 பைசா நம்மிடம் இருந்தால் நாம்தான் சிற்றரசு.. எட்டணா இருந்தால் நாம்தான் பேரரசு... தேன் மிட்டாய்களையும், பர்பி மிட்டாய்களையும் சட்டை பாக்கெட்டில் போட்டு கொண்டு ஆசிரியருக்கு தெரியாமல் வகுப்பில் தின்ற அந்த நாட்கள்...
![[ThirunelveliInippu.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM3RqC0l37MuQu8TZAGc4AgZxxIbx8Lqb2Dp64suGxg_bWIPjqqwIhUGDiTqGSa8ndgUTUzxBnSlqTFaZSAEHzXW5JnUMMeHKLsMJjV4DXeuUwsa4AVjGcNLBm5mGGL1Wge4ip3GS9U76l/s1600/ThirunelveliInippu.jpg)
தாகம் என்றதும் ஐஸ் போட்ட பன்னீர் சோடா ஒன்று குடித்து விட்டு..களைப்பின்றி விளையாடி திரிந்த அந்த நாட்கள்....
ஆயிரம் இ-மெயில், சாட், மொபைல் லொட்டு லொசுக்குகள் வந்தாலும்.. நம் கைப்பட இன்லான்ட் லெட்டரில் நம் தாய்க்கு கடிதம் எழுதிய அந்த நாட்கள்.... எழுத்து பிழைகள் எத்தனை இருந்தாலும்... அன்பு எனும் அட்சய பாத்திரமாக நம் தாய் நமக்கு கடிதம் எழுதிய அந்த நாட்கள்....
எல்லாம் தொலைந்து போய் விட்டன என்பதை நினைக்கையில்... நாம் எத்தனை லட்சங்கள் சம்பாதித்தாலும்...நாம் தொலைத்தது எத்தனையோ.. இன்று ஏதோ ஒரு கட்டிடத்தில் நடுநிசியில் ஐ.டி . மற்றும் B.P.O நிறுவனங்களில் தூக்கத்தை தொலைத்து விட்ட பலர், மார்க்கெட்டிங் வேலை நிமித்தமாக மாநகர நெரிசலில் சுற்றி திரியும் நண்பர்கள் பலர், சொந்த தொழில் செய்து குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க இயலாமல் நம்மில் தவிக்கும் பலர்..
இன்று ஞாயிற்றுகிழமை ஒரு நாள் நமது நினைவுகளை அசை போட இந்த கட்டுரை உதவினால் எனக்கு மகிழ்ச்சி... ஒரு வேண்டுகோள்... மீண்டும் ஒரு முறையாவது.. இன்லான்ட் லெட்டர், பப்ளிக் போன், பச்சை நிற பல்லவன், தேன் மிட்டாய், பன்னீர் சோடா......அனுபவித்து பாருங்க நண்பா... இந்த ஞாயிறு இல்லை எனில் அடுத்த ஞாயிறாவது..........


1 கருத்து:
Siva,
Naanum Romba naalaga, 5 Paisa Thaen Mittai,& Peppermint, 1rooba 50 Paisa Panneer Soda, Rasna packet, 50 paisa Seeraga Mittai,10 paisa Orenju Mittai, 25 paisa Kamarkattu, 50 paisa Murukku, 2 rooba single Tea, 25 paisa Butter biskut, 5 paisa Button Biskut, saapidanum endru roma naala asai, Enna Recession mattrum, Inflation karanumma adhu velai ellam yeri ponadhala vanga mudiyela.. Naan Ennoda Rasna Packet-tum sila aandugalukku mun nanbargala irunthom, Oru-Oru naalum Sainthiram, Paal vanga pogum pothu oru kadaiyil nan rasna vangi kudipen . Adi patri ippo ninaikkum pothu ,naaku varandu poguthu , adanaal naan Coke kudithu kondu ,indha comment adikuren, Thaen Mittai ki Padhila , Sri Krishna Sweets Maisurpa..., Orengu Mittai ku ipo Substitute Candyman, Peppermint ku ippo POLO(mint with a hole..) appo Rasna ippo Slice & Maaza, Adhukkum mela Single Tea badhila vending machine tea. Nakku Sethu Pochu Che Thu...YUK- Sid
கருத்துரையிடுக