இடம்: BAR
ஒரு அமெரிக்கன், ஒரு இத்தாலியன் மற்றும் ஒரு ஸ்காட்லான்ட் வாசி மூவரும் பாருக்குள் நுழைந்தனர். மூன்று பேரின் கோப்பையிலும் ஒரு பூச்சி விழுந்து கிடந்தது. அமெரிக்கன் கோவமாக அந்த கோப்பையை வீசி எறிந்தான். இத்தாலியன் பூச்சியை வெளியே வீசி விட்டு குடிக்க தொடங்கினான். ஸ்காட்லான்ட் வாசி பயங்கர கோபத்துடன் அந்த பூச்சியை கையில் எடுத்து அதை மிரட்டினான்.. "மரியாதையா நீ குடிச்ச பீரை என் க்ளாஸ்ல துப்பிடு".
.............................................................................
இடம்: விமானத்திற்கு உள்ளே
சுனில் தன் பக்கத்து சீட்டில் ஒரு கிளி இருப்பதை கண்டு சற்று வியந்தான். பணிப்பெண் வந்தாள். "எனக்கு ஒரு டீ" என்றான் சுனில். " எனக்கு ஒரு பெப்சி கொண்டு வாடி" என்றது கிளி. சற்று நேரத்தில் ஒரு பெப்ஸியுடன் வந்து கிளிக்கு தந்தாள் பணிப்பெண். சுனில் கத்தினான் "எனக்கு டீ எங்கே.முட்டாளே போய் கொண்டு வா" என அவளை அதட்டினான். கிளி சொன்னது "அடியே, எனக்கு இன்னும் ஒரு பெப்சி". சிறிது நேரத்தில் அவள் மீண்டும் ஒரு பெப்சியை மட்டும் கிளிக்கு அளித்தாள். சுனில் மிகவும் கோபமாக "ஏண்டி அறிவு கெட்டவளே.. எங்கடி என்னோட டீ?". அவள் பேசாமல் சென்று விட்டாள் .
சிறிது நேரத்தில் இரண்டு விமான காவலாளிகள் வந்தனர். சுனில், கிளி இருவரையும் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே தள்ளி விட்டனர். அப்போது சுனிலிடம் கிளி சொன்னது "தம்பி, பறக்க தெரியலன்னா ரொம்ப பேசக்கூடாது".
.....................................................................................................................................
இடம்: உயிரியல் பூங்கா.
குரங்கு: அண்ணே, எதுக்கு அந்த ஆளை அடிச்சி கொன்னுட்ட..
புலி: என்னை பார்த்து அவன் என்ன சொன்னான் தெரியுமா?
குரங்கு: என்ன அண்ணே சொன்னான்?
புலி: "எவ்ளோ பெரிய பூனை!"
.....................................................................................................................................
இடம்: அலுவலகம்.
ஒரு கம்பனியின் மானேஜரை காண அவர் மனைவி திடீரென அலுவலகத்திற்கு வந்து விட்டார். அங்கு அவள் கணவன் மடியில் இளம் பெண் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். உடனே உஷார் ஆனா கணவன், அந்த இளம் பெண்ணிடம் சொன்னான் "நான் சொல்வதை டைப் செய்..... ஒரு நாற்காலி வைத்துகொண்டு எங்களால் வேலை செய்ய முடியாது. உடனே இன்னும் ஒரு நாற்காலி அனுப்பி வைக்கவும்".
..................................................................................................
இடம்: நெடுஞ்சாலை.
பைக்கில் குடித்துவிட்டு வேகமாக வந்து கொண்டு இருந்த ராசுவை மடக்கினார் போலீஸ்.
ராசு: "சார் நான் சொல்றத கொஞ்சம்"
போலீஸ்: "வாயை மூடு"
ராசு: "சார் நான்.."
போலீஸ்: "மூடுடா வாயை. உன்னை ஜெயில்ல இன்னைக்கி ராத்திரி போடுறேன். நாளை காலை உயர் அதிகாரி வந்ததும் நீ போகலாம். அவர் மகளுக்கு இன்று கல்யாணம். அந்த மகிழ்ச்சியில் உன்னை உடனே விட்டு விடுவார்"
ராசு: "அது நடக்காது சார்"
போலீஸ்: "ஏன்டா"
ராசு: "நாந்தான் சார் மாப்ள"
.....................................................................


2 கருத்துகள்:
GOOD.
ரசித்தேன் வாழ்த்துக்கள்...!
கருத்துரையிடுக